Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு…. அடித்து பிடித்து செல்லும் மக்கள்…. அரசின் அதிரடி நடவடிக்கை….!!

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருக்கின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அச்சம் அடைவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமையானது மோசமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என்ற பீதியில் மக்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள் மட்டுமின்றி கூடுதல் கேன்களில் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. இதனால் மேலும் அச்சமடைந்த மக்கள் இருக்கின்ற எல்லா எரிபொருள் நிலையங்களுக்கும் அடித்துப் பிடித்துச் சென்று பெட்ரோலை நிரப்பி வருகின்றனர்.

ஆகவே எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காகவும், மக்களின் பீதியை குறைக்கவும் அரசாங்கம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்குவதை இலக்கு வைக்க எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கும் “போட்டி சட்டத்தை” அரசாங்கம் அமல்படுத்த இருக்கின்றது. இந்த நடவடிக்கையானது எரிபொருள் நிறுவனங்கள் தகவல்களை பகிர்வதை எளிதாக்கும் மற்றும் நாட்டின் மிகவும் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு படி மேலே சென்று எரிபொருளை விநியோகம் செய்ய ராணுவத்தை பயன்படுத்த அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |