தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை முழுவதுமாக திறக்காததால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மேலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. அரசு பள்ளிகள் திறந்திருக்கும். வர வேண்டியவர்கள் வரலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.