அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்த 39,000 ரசிகர்களில் 40 வயது மதிக்கதக்க பெண்ணும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் அரங்கத்தின் 3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா என்னும் மாவட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதனை பார்ப்பதற்காக அமெரிக்க கூடைப்பந்து ரசிகர்கள் சுமார் 39,000 பேர் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் கூடைப்பந்து போட்டியை பார்ப்பதற்காக அரங்கத்திற்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் அரங்கத்தின் 3 ஆவது அடுக்கு மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் விளையாட்டு அரங்கத்தின் 3 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.