கர்நாடக மாநிலம், கந்தடா மண்டலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் டியூஷன் நடத்தி வரும் ஆசிரியரிடம் மூன்று ஆண்டுகளாக படித்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கு அவர் ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி அவரை மட்டும் தனியாக டியூஷனுக்கு வர சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியிடம் நெருக்கமாக பழகியதால் அந்த மாணவி கர்ப்பமானார். மாணவியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை பார்த்த அவரது பெற்றோர்கள் சந்தேகப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரணை செய்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அந்த மாணவியுடன் கடந்த ஒரு வருடமாக தவறான உறவில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.