ஜெர்மனியில் நடைபெற்ற தற்போதைய பொதுத்தேர்தலில் 205 இடங்களை பிடித்து வெற்றி வாகையை சூடிய மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி ஏஞ்சலா மெர்கலின் 16 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இருந்தே அந்நாட்டை கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஏஞ்சலா மெர்க்கலின் என்பவர்தான் ஆட்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜெர்மனி நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கலினுடைய 16 வருட ஆட்சியை மத்திய இடது சமூக ஜனநாயகக் கட்சி முறியடித்துள்ளது.
ஏனெனில் ஜெர்மனியில் தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி சுமார் 205 இடங்களை பிடித்து அபார வெற்றியை சூடியுள்ளது. ஆனால் ஜெர்மனியை 16 வருடங்கள் ஆட்சி செய்து வந்த ஏஞ்சலா மெர்க்கலினுடைய கட்சி வெறும் 194 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.