Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வந்தவரோடு குடித்தனம் நடத்திய மருமகள்…. மாமனாரால் நடந்த விபரீதம்…. கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் வெளுகோடு மண்டலம் சிபி நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் பீட்லா சின்னி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் மல்லிகார்ஜுனா அடிக்கடி தனது முதல் மனைவியை பார்க்க சென்றுவிடுவார். இந்த சமயத்தில் பீட்லா சின்னி வீட்டிற்கு கட்டட வேலை பார்க்க வந்த சந்தா ஒபுலேசு என்பவருடன் பழகி வந்துள்ளார். காலப்போக்கில் இந்த பழக்கம் கள்ளக்காதல் ஆனது. இருவரும் மல்லிகார்ஜுனா இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை மல்லிகாவின் தந்தை ராமனய்யா பார்த்து அவர்களை எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாமனார் அருவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராமனய்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |