ஜெர்மனியின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஜெர்மனியில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பெண் பிரதமராக ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்று தொடர்ந்து 16 வருடங்களாக பதவி வகித்து வந்தார். இதனையடுத்து தனது சிறப்பான ஆட்சியால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதன் மூலமாக ஏஞ்சலா மெர்க்கல் உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மேலும் ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைதொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்த ஏஞ்சலா மெர்க்கல் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அரசியல் வாழ்வில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஜெர்மனியின் புதிய பிரதமர் யார் என்கின்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி தங்களை ஆளப்போகும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.
ஆகவே யாருக்கு வெற்றி வாய்ப்பு, யாருடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதுவும் தெரியாத நிலையில் இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளர் ஆர்மீன் லேஷெட்டுக்கு தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தன் ஆதரவை தெரிவித்துள்ளார். அதன்பின் ஆர்மீன் லேஷெட் தவிர கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளரான அனலேனோ பேர்பாக், ஜெர்மனியின் தற்போதைய நீதி மந்திரியான ஓலாப் ஷோட்ஸ் ஆகிய இருவரும் சக்திவாய்ந்த வேட்பாளராக அறியப்படுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.