பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் தனது 23 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இணையதளத்தில் பல சாதனைகளைப் படைத்து ஜோலித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறி முதல் ஆன்லைன் விளம்பரம் மற்றும் வன்பொருள் என இணைய தளத்தின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்றது கூகுள்.
1998 ஆம் ஆண்டு தொடங்கி கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிலையில் கூகுளின் பிறந்தநாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வேலைகள் மற்றும் செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.