Categories
உலக செய்திகள்

அமெரிக்க டாலர் பற்றாக்குறை…. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்…. நிலைகுலைந்த இலங்கை….!!!

அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச சந்தையில் விலைவாசி உயர்வு, மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதே இதற்கு முக்கிய காரணம் என்றும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 31-ஆம் தேதி இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையையும் அறிவித்தது. எனினும் எந்த பலனும் இல்லை இன்னும் நிலைமை மோசமடைய தான் தொடங்கியது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பிரதமர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதற்கும் அரசு இணங்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் விவகார மந்திரி பந்துல குணவர்வர்தனா கூறுகையில், “இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க டாலர் பற்றாக்குறையாலும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வாலும் தொடர்ந்து இந்த சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உள்ளூர் வங்கிகளில் போதிய அளவு அமெரிக்க டாலர்கள் இல்லாத காரணத்தால், கொழும்பு துறைமுகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு பெட்டகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நாட்டுக்குள் எடுத்து சொல்ல முடியாமல் தேங்கியிருப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கு இலங்கை அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |