Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆரம்பத்தில் இருந்து அதிரடி.. ”திமுகவை தூக்கிய அதிமுக”…. அசத்தல் வெற்றி …!!

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அதிமுக முன்னிலை வகித்து வந்தது. 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதில் 9_ஆவது சுற்றில் மட்டும் அதிமுக சற்று பின்னடைவை சந்தித்தது.மற்றபடி அனைத்து சுற்றிலும் அதிமுகவே முன்னிலை வகித்தது.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தனனை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட  44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே போல நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி : அதிமுக வெற்றி 

முத்தமிழ் செல்வன் ( அதிமுக ) : 1,13,428

புகழேந்தி ( திமுக  ) : 68,646

கந்தசாமி ( நாம் தமிழர்  : 2,913

நாங்குநேரி : அதிமுக வெற்றி 

நாராயணன் ( அதிமுக ) : 94,562

ரூபி மனோகரன் ( காங்கிரஸ்  ) : 62,229

ராஜ நாராயணன் ( நாம் தமிழர் ) :  2,662

புதுச்சேரியில் காமராஜ் நகர் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |