Categories
உலக செய்திகள்

சவரம் செய்ய கூடாது…. இசை இசைக்கத் தடை…. தலீபான்களின் அதிரடி உத்தரவு….!!

ஆப்கானில் ஆண்கள் சவரம் செய்யவும் இசை இசைக்கவும் தலீபான்கள் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான Lashkar gau வில் முடிதிருத்தும் ஊழியர்களுடன் தலீபான் அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

அதில் அவர்கள் கூறியதாவது “ஆப்கானில் உள்ள ஆண்கள் தாடியை சவரம் செய்ய கூடாது அதோடு ஹெல்மண்ட் மாகாணத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் கலாச்சார அதிகாரியான Hafiz Rashid Helmandi தெறிவித்துள்ளார். மேலும் இந்த தடையை ஆப்கான் முழுவதும் அமல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

தலீபான்கள் 20 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக தலீபான்கள் ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி அமைக்கப்படும் என தெரிவித்த நிலையில் அதற்கு மாறாக செயல்பட்டு வருவதோடு, நாங்கள் மாறி விட்டோம் என்று கூறுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |