எல்லை கடந்த இராணுவ வீரர்களை அமெரிக்காவின் பாதுகாப்பு படையினர் கைது செய்து பின்னர் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் சட்டவிரோதமாக மெக்சிகோ வழியே எல்லை கடந்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையோர நகரங்களில் அமெரிக்க பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லைக்குள் மெக்சிகோ இராணுவ வீரர்கள் தங்கள் வாகனங்களில் நுழைந்துள்ளனர்.
இதனை கண்டதும் ரோந்து பணியில் இருந்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் எல்லைக்குள் நுழைந்த மெக்சிகோ இராணுவ வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் சென்ற 7 வீரர்களை அதிரடியாக கைது செய்து அவர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இச்சம்பவம் குறித்து மெக்சிகோ அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள் என தெரியவந்துள்ளது.