உள்நாட்டு எல்லைகளை திறப்பதற்காக ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் அங்கு கொரோனா பரவல் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று விக்டோரியா மாகாணத்தில் 779 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 960 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் மாகாணம் மற்றும் பிராந்திய தலைவர்களிடம் உள்நாட்டு எல்லைகள் திறக்க வலியுறுத்தி உள்ளார். ஆனால் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணங்கள் தங்கள் உள்நாட்டு எல்லைகளை திறப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதனால் உள்நாட்டு எல்லைகளை திறக்க மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.