Categories
உலக செய்திகள்

சொன்ன சொல் தவறிய சீனா…. மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள்.. எல்லையில் மீண்டும் பதற்றம்….!!

இந்திய சீன எல்லை பகுதியில் சீனா தனது  படைகளை மீண்டும் குவிக்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை குறைக்க அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன்மூலம் சமரசம் ஏற்பட்டது. இதனால் எல்லையோர பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சீனா “இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட மாட்டோம்” என்று வாக்குறுதி அளித்திருந்து. இந்த நிலையில், மீண்டும் 17 மாதங்களுக்குப் பிறகு இந்திய சீன எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை சீன ராணுவம் உருவாக்கியது தெரியவந்துள்ளது.மேலும் எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் விமானங்கள் தரை இறங்குவதற்கான கட்டமைப்புகளை அதிகரிக்க சீன ராணுவம் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Categories

Tech |