சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியிலுள்ள சாலை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் கரைகள் உடைந்து இருக்கிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.