Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல் தடுப்பூசி…. கட்டுப்படுத்தும் பணி தீவிரம்…. அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

அமெரிக்காவில் 18 கோடிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திவிட்டதாக அரசு அறிவிப்பு.

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக மக்களுக்கு மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளையே பெருமளவில் செலுத்துகின்றனர். மேலும் அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வருகின்றனர். இதனால் அங்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கையானது 39,01,14,328 பேர் என்று நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 21,34,56,787 பேர் ஆவர். மேலும் 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தியவர்களின் எண்ணிக்கை 18,36,70,870 பேர் ஆவர் என்றும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 20 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு 3 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 

Categories

Tech |