வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த வாலிபர் ஒருவரை கும்பலில் இருந்த மற்றவர்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனையடுத்து கல்லால் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.