Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில்…. 56,000 காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் குட் நியூஸ்…!!!

தமிழக மின்சாரவாரியத்தில் காலியாகவுள்ள 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் செந்தில் பாலாஜி என்று என்னுடைய பெயர் இருந்ததாகவும், எனக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனக்கு எந்தவொரு நோட்டிசும் அனுப்பப்படவில்லை. அவருடைய டைரியில் எனது பெயர் உள்ளது என்று கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதாக அதிமுகவினர் கூறினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழக மின்சார வாரிய துறையில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. அதில் எந்த பணியிடங்கள் அவசரம்? அவசியம் என்று ஆய்வு செய்து விரைவில் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |