Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநகராட்சி மேயர் தேர்தல் எப்பொழுது…? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

சிவகங்கையில் மருத்துவ பயனாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்  பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி அமைப்பு என்பது ஒரு மரத்தின் வேர்களை போன்றது. அந்த வேர்களை சிதைத்தது அதிமுக அரசுதான். ஒரு தேர்தலை நடத்த வேண்டுமென்றால் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஒதுக்கீடு போன்ற பல அடிப்படை நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பிறகுதான் நடத்தமுடியும்.

அவரவர் தேவைக்கு ஏற்ற போதும், விரும்புகின்ற பொது தேர்தலை நடத்த முடியாது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் படிப்படியாக நடத்தப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற விடாமல் தடுத்தனர்.  என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |