தமிழகத்தில் பொதுமக்கள் ‘என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அவர், சேகர் ரெட்டியின் டைரியில் என்னுடைய பெயர் இல்லை. எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனது பெயர் உள்ளது என்று யார் கூறுகிறார்களோ அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள். மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு கடந்த 100 வந்த புகார்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மின் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின்வாரியத்தில் மொத்தம் 56,000 காலி பணியிடங்கள் உள்ளது. அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.