Categories
தேசிய செய்திகள்

புதுமண தம்பதிக்காக நடுவழியில் காரை நிறுத்திய முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!!

பஞ்சாப்  முதலமைச்சர் நடு வழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, பதின்ட்டா என்ற இடத்திற்கு ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த புதுமண தம்பதியினரை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து நடுவழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் திருமண வீட்டார் கொடுத்த இனிப்பையும் சாப்பிட்டுள்ளார்.

ஆனால் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, போலீசார், புதுமண தம்பதி என்று யாரும் முக கவசம் அணிய வில்லை. இதுதொடர்பான வீடியோ பஞ்சாப் முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |