விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் கூட்டணியில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் தமிழர் கட்சியும் தங்களது வேட்பாளரை அறிவித்தத்து.
21_ஆம் தேதி பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில் தொடக்க முதலே விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தனர். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 10,000 , 20,000 , 30,000 , 40,000 வாக்குகள் வித்தியாசம் என தொடர்ந்து முன்னிலையில் வகுத்த நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட புகழேந்தியை விட 44,5782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முத்தமிழ் செல்வன் ( அதிமுக ) : 1,13,428
புகழேந்தி ( திமுக ) : 68,646
கந்தசாமி ( நாம் தமிழர் : 2,913
அதிமுக வெற்றி