Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தளபதி66 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இவரா? ரொம்ப பிஸியான நடிகர் ஆச்சே… OK சொல்லிடுவாரா..!!!

தளபதி66 படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் விஜயின் தளபதி66 படத்திற்கான அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் தளபதி66 படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் நானி இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் பயங்கர பிசியான நடிகராக வலம் வருவதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மிரட்டும் வில்லனாக நானி.. 25வது திரைப்படம் "வி" ஓடிடியில் ரிலீஸ்! | Nani's  'V' movie direct release on ott platform - Tamil Filmibeat

Categories

Tech |