Categories
தேசிய செய்திகள்

மனைவியை வேறொரு ஆணுடன் பழக அனுமதித்து… சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கணவன்… இறுதியாக நடந்தது என்ன..?

கணவனே தன் மனைவியை வேறொரு நபருடன் பழக அனுமதித்து பின்னர் அதற்காக வருத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருமனம் இணையும் திருமணத்தில் மூன்றாவதாக ஒரு நபர் நுழையும் போது அங்கே பிரச்சினைகள் தலைதூக்க தொடங்குகின்றன. இப்பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு ஒரு கணவர் செய்த விஷயம் பின்னாளில் அவருக்கு விபரீதமானது. இது குறித்த விரிவான தகவல்களை காண்போம். மனைவிக்கு நன்மை செய்வதாக நினைத்து கணவர் ஒருவர் மாட்டிக்கொண்டு விஷயம் நடந்துள்ளது. இதுகுறித்து அவர்,ரெடிட் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுவதாவது, “நான் திருமணத்திற்கு பிறகு வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்ததால் என்னால் என் மனைவியை சரியாக கவனிக்க முடியவில்லை. இருப்பினும் என் வேலையால் அவள் சந்தோஷம் கெட்டுப் போகக் கூடாது எனக் கருதி என் மனைவியை அவருக்கு பிடித்த நபருடன் சில நிபந்தனைகளுடன் பழக அனுமதித்தேன். இது எங்கள் வாழ்க்கை அழகாகும் என நம்பினேன். ஆனால் இதுவே எனக்கு பின்னாளில் ஆப்பாக மாறும் என நான் நினைக்கவில்லை. என் மனைவி நான் கூறியது போல அவர் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒருவருடன் ரொமான்டிக்காக பழகி வந்தார்.

இந்த தொடர்பு நாளடைவில் கொஞ்சம் சீரியஸாக மாறியது. இதனை என்னால் மனதளவில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களது உறவு எங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கும் நிலை வந்ததாக நான் எண்ணினேன். இதனால் அவரை அந்த விஷயத்தில் இருந்து திசை திருப்பும் வகையில் அவருக்காக நானே உணவு தயார் செய்து கொடுத்தேன், வீட்டை சுத்தம் செய்து வைத்தேன், இருந்தாலும் அவர் மனம் மாறவில்லை. அந்த நபர் மீது காதல் குறையவில்லை.

என்னை ஒரு கணவனாக கூட அவர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்நிலையில் அவர் தனது புதிய காதலருடன் டூர் செல்வதாக சொல்லிவிட்டு சென்றார். அதை நான் எவ்வளவோ தடுத்தும் அவர் என் பேச்சைக் கேட்கவே இல்லை. சென்று வந்த பின் அவருடன் பழகி கொள்வதை நிறுத்துமாறு சொன்னேன். “பார்ப்போம்” என்றார் அவருக்காக நான் என்னென்னவோ செய்து பார்த்தேன் எந்த முயற்சியும் பலன் தரவில்லை. நான் திருமண வாழ்வில் தோற்று விட்டதாக உணர்கிறேன்”. என்று கூறியுள்ளார்.

Categories

Tech |