மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.