Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு… மனைவி குத்திக்கொலை…. தப்பியோடிய கணவர்….போலீஸ் வலைவீச்சு….!!!

மராட்டியத்தில் மனைவியை கொன்று விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பகுதியில் ஜெகதீஸ் குராவ் மற்றும் இவருடைய மனைவி இருவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஸ் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீஸ் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |