தமிழகத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 28,91,021 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து இரண்டாவது நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 16,43,879 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்றாவது தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அதில் ஒரே நாளில் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி அளித்தால் நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இன்னும் கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி அனுப்பினால் நான்காவது முகாம் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியாகும். அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி திருவிழாபோல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று மா. சுப்பிரமணி தெரிவித்தார்.