வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தை உலக வங்கி பாராட்டியுள்ளது. மேலும் அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, தனியார் துறையை உயர்த்துவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு 77வது இடத்தில் இருந்த இந்தியா, நரேந்திர மோடி அரசாங்கத்தின் இந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவின் தரவரிசை 2014இல்142-வது இடத்திலிருந்து 2019இல் 63வது இடத்திற்கு 79 இடங்கள் முன்னேறியுள்ளது. இது ஒரு பெரிய பொருளாதாரத்திற்கான சாதனையாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.