Categories
உலக செய்திகள்

வளங்களை கைப்பற்றும் முயற்சி…. தொடரும் பயங்கரவாதம்…. 44 பேர் பலியான சோகம்….!!

ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏமனில் உள்ள மரீப் மாகாணத்தின் எண்ணெய் வளங்கள் நிரம்பிய கிணறுகளைக் கைப்பற்ற பல்வேறு முயற்சியில் ஹவுதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏமனின் அரசு படையினர் ஹவுதி கிளர்சியாளர்களின் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ராணுவப் படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழி தாக்குதலை நடத்தினர். இவ்வாறு பதிலுக்கு பதில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருதரப்பிலும் அதிகளவில் சேதம் உண்டாகியுள்ளது.

இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 28 பேர் ராணுவ படையினால் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஏமனின் ராணுவப்படை வீரர்கள் 16 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |