பிரான்ஸ் அரசு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து, அனைவரும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் அதிபரான Jean Castex, ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், இலவச பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் மருத்துவர் பரிந்துரைத்த சீட்டை கொண்டு வர வேண்டும். தடுப்பூசி செலுத்திய மக்களுக்கு அது தேவையில்லை. எனினும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அதாவது, சுகாதார பாஸ்போர்ட்டை பெற, தடுப்பூசி செலுத்தாத மக்கள் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.