கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது.. இந்த கல்லூரியில் பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் விமானப்படை அதிகாரி வந்துள்ளார்.. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு ஆண் அதிகாரி லெப்டினன்ட் அமிர்தேஷ் (30) என்பவரும் வந்திருந்தார்.. கடந்த 10ஆம் தேதி பெண் அதிகாரி பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக காலில் காயம் ஏற்பட்டுள்ளது..
இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு அறைக்கு சென்றுள்ளார். அப்போது அறைக்குள் சென்ற அமிர்தேஷ் வலுக்கட்டாயமாக பெண் அதிகாரியை கற்பழித்துள்ளார். இதுபற்றி உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பெண் அதிகாரி விமானபடை அதிகாரி லெப்டினன்ட் அமிர்தேஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் கோவை மாநகர காவல் துறையில் புகாரளித்தார்.. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து அதிகாரி அமிர்தேஷை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்..
அப்போது விமான படை அதிகாரி மீது கோவை போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் பிராமணபத்திரம் தாக்கல் செய்தார்.. இதையடுத்து கோவை போலீசார் பதில் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்வதற்கு நீதிபதி உத்திரவிட்டார்..
இதனை அடுத்து உடுமலை பகுதியில் உள்ள கிளை சிறையில் அமிர்தேஷ் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் கோவை குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் அமிர்தேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.. அதேபோல பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் நேரடியாக வந்திருந்தார்.
விசாரணை தொடங்கிய போது, விமானப்படை சட்டப்பிரிவுக்குட்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கினை முழுமையாக நாங்கள்தான் எடுத்து நடத்த வேண்டும்.. எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று நீதிபதி முன்வைத்தனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் இந்த வழக்கை நாங்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எனவே குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தனர்..
இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு முழு பாதுகாப்பு என்பது விமானப்படை வளாகத்தில் இல்லை நான் புகார் அளித்து இருக்கிறேன்.. எனது பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.. எனவே காவல் துறையினர் எனது வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விமான படை அதிகாரிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்..