Categories
உலக செய்திகள்

மன உளைச்சலில் இருந்து விடுதலை…. விவாகரத்து வாங்கிய 45 வயது பெண்…. பார்ட்டி வைத்து கொண்டாட்டம்….!!

தனது திருமண வாழ்க்கையை முடித்து  விவாகரத்து வாங்கியதை பார்ட்டியை  கொடுத்து  45  வயது பெண்  ஒருவர் கொண்டாடியுள்ளார். 

இந்தியாவை சேர்ந்தவர் சோனியா குத்தாவிற்கு  கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இங்கிலாந்தில் வாழ்க்கையை தொடங்கினார். இதனை அடுத்து இவரின் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் எப்பொழுதும் சண்டை, சர்ச்சரவுமாக இருந்ததால் விவாகரத்துக்கு வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கு  கடந்த மூன்று வருடங்களாக நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை மகிழ்ச்சியாக கொண்டாட கிராண்ட் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த பார்ட்டிக்கு உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும்  அழைத்துள்ளார். மேலும் இந்த பார்ட்டியில் சோனியா குப்தா final divorced எனும் பேண்டை அணிந்து  கொண்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து சோனியா குப்தா கூறியதாவது “நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது 17 வருட மன உளைச்சலில்  இருந்து தற்போது எனக்கு விடுதலை  கிடைத்துவிட்டது. அதனால் இதை நான் கொண்டாட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |