Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை… 33 பேர் கொண்ட கும்பல் கைது…. அதிர வைத்த சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில், 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தொடர்ந்து பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை மேலும் சிலருக்கு அனுப்பி அவர்களும் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுபற்றி சிறுமி தன்னுடைய அத்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கடந்த 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையில் 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |