செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். புதுவை, கேரளா, கர்நாடகா, மாநிலத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வைத்திருந்தார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.