கார் மீது கல் வீசி தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் முகமது நபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் ஆசாத் சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வலுக்கொடை அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆசாத் தெருவில் வசிக்கும் அப்துல்லா, ரபீக் ஆகியோர் திடீரென முகமது நபிலின் காரின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினர்.
இதுகுறித்து முகமது நபில் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்துல்லா, ரபீக் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.