Categories
அரசியல்

ஸ்டாலின் என்ன ? எந்த கொம்ப வந்தாலும் முடியாது – சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு …!!

மக்கள் யாருக்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து விட்டாலும் யாரும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சி சண்முகம், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிந்து தேர்தல் பிரச்சாரத்தை நாம் தொடங்கி இருக்கின்றோம். 10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியாக நாம் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். தேர்தல் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல, நாம் ஆளுங்கட்சியிலும் தேர்தலை சந்தித்து இருக்கின்றோம். எதிர்க்கட்சியிலும் தேர்தலை சந்திக்கின்றோம். இங்கு வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள் ஆகட்டும், இங்கே இருக்கின்ற வேட்பாளர்கள் ஆகட்டும் மனதில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…

ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி நாம் தேர்தலை தைரியமாக சந்திக்க வேண்டும். எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆளுங்கட்சியில் இருக்கின்றது. அவர்கள் பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள் என்று நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. அதை உங்கள் மனதிலிருந்து எடுத்து விடுங்கள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவோம் என்று முடிவு செய்து விட்டால் அதை யாராலும், எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது.

இரட்டை இலைக்கு தான் வாக்களிப்பேன் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் எவ்வளவு கொடுத்தாலும் சரி, ஸ்டாலின் வீடு வீடாக ஏறி இறங்கினாலும் வெற்றி பெற முடியாது. ஆகவே தயவு செய்து வருகை தந்திருக்கின்ற வேட்பாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றை மனதில் தெளிவாக முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வேட்பாளர்களுக்கு, கழகத்திற்கு, அம்மாவினுடைய வேட்பாளர்களுக்கு இரட்டை இலைக்கு வாக்களிப்பேன் என்று மக்கள் முடிவு செய்து விட்டால் எந்த கொம்பனாலும் நம்மை தோற்கடிக்க முடியாது என அவர் கூறினார்.

Categories

Tech |