ஏர்டெல் , வோடபோன் நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில்,
தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று சுட்டிக்காட்டிய நிலையில் உச்சநீதிமன்றம் ஏர்டெல் , வோடபோன் நிறுவனம் 92 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். மத்திய அரசு 1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிடத்துள்ளது.