நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 99% செயல்படாது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார்.
விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கின்றார் நாங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று மக்களிடம் பச்சை பொய்யை கூறி கொண்டிருக்கிறார். எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்… மக்களுக்குத் தெரியாதா ? சொல்லியிருக்கின்ற 2, 3 வாக்குறுதிகளும் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதிகள். தேர்தல் நேரத்திலேயே என்ன சொன்னார் ? ஸ்டாலின் ஊர் ஊராக.. தெருத் தெருவாக போனார்.
அவரோடு அவருடைய கொடுக்கு உதயநிதி ஸ்டாலினும் போனார், சொன்னார். இன்றைக்கு வீடியோவில் எல்லாம் வருகிறது. ஸ்டாலின் என்ன சொன்னார் ? அனைத்து வகையிலும் வைத்திருக்கின்ற 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார். அதை அவருடைய மகனும் இன்றைக்கு இளவரசர் பட்டம் பெற்று கொண்டிருக்கின்ற உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னார் தேர்தலிலே ? எங்க அப்பா சொல்லிட்டார், எங்க அப்பா சொல்லிட்டாரு. எங்க அப்பா ஸ்டாலின் சொல்லிட்டாரு….
அனைத்து வங்கியிலும் வைத்திருக்கின்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்… தள்ளுபடி செய்யப்படும்… ஒடுங்க…. ஒடுங்க… எல்லா நகைகளையும் வையுங்க… எல்லா நகையையும் வையுங்க…. உங்களுக்கு எல்லாம் தள்ளுபடி என்று சொன்னாரா ? இல்லையா ? இந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றதா ? இல்லையா ?
அதை நம்பி… ஸ்டாலின் சொன்னதை நம்பி…. உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நம்பி கடனை வாங்கி அக்கம் பக்கத்தில் இருக்கிற நகை எல்லாம் வாங்கி அன்றைக்கு அடமானம் வைத்து இருக்கின்ற அந்த ஏழை எளிய மக்களுக்கு அனைத்து நகை கடனும் தள்ளுபடி செய்யாமல், இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார்…. கூட்டுறவு வங்கியில் இருக்கின்ற குடும்பத்திலேயே ஒருவர் மட்டும் வைத்திருக்கின்ற 5 பவுன் நகை கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழைகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி செய்யப்படும். அப்படி என்றால் இந்த திட்டம் செயல்படுத்தபடாது. 99 சதவிகிதம் இந்த திட்டம் செயல்படுத்தபடாது. என விமர்சித்தார்.