Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த முகாமில்  60000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த முகாமை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 6 மண்டல அதிகாரிகள் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் என பல அதிகாரிகளுடன் உடன் இருந்துள்ளனர். மேலும் இந்த முகாமில் பொதுமக்களுகென கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |