தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொடக்க பள்ளி திறப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியது, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் எந்த ஒரு பயனளிப்பதில்லை. மாணவர்களுக்கு கற்றல் திறன் தான் குறைந்து வருகிறது. இதையடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று எந்தவொரு அறிவியல் அடிப்படையிலும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் குழந்தைகள் விளையாடும்போது மற்றும் மற்றவருடன் கலந்துரையாடும் போதும் சமூக இடைவெளி குழந்தைகளிடையே காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் குழந்தைகளுக்கு மிக குறைவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார்.