வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். தற்போது கோகுலகிருஷ்ணனை கவனித்துக் கொள்ள முடியாததினால் அய்யனார் வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அய்யனார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அய்யனாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.