புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாத்திநாயக்கம்பட்டி பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து புவனேஸ்வரி பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெட்டிக்கடையை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 39 புகையிலை பாக்கெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு புவனேஸ்வரியிடம் இருந்த புகையிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புவனேஸ்வரியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.