எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வாகன ஓட்டுனர்களுக்கு தற்காலிகமாக விசா வழங்கி அவர்களை வரவழைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிக ஊதியம் அளித்தாலும் சிறப்பு விசா கொடுத்தாலும் வெளிநாட்டு ஓட்டுனர்கள் வரமாட்டோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து கனரக வாகன யூனியன் தலைவர் ஒருவர் கூறியதில் “பிரித்தானியா தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டுள்ளது. ஆகையால் அதன் விளைவை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் நாங்கள் எவரும் உதவிக்கு வரப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியா வாகன ஓட்டுனர் கூறியதாவது “நாங்கள் எங்கள் சமுதாயத்தில் தொழுநோய் நோயாளிகளை விட மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றோம். மேலும் கொரோனா தொற்று பரவல் நிலையிலும் பிரெக்சிட்டிற்கு முன்னதாகவே எங்களது தொழிலானது பல்வேறு இன்னல்களை சந்தித்தது.
இதனால் பல வாகன ஓட்டுனர்கள் வேலையை விட்டு சென்று விட்டனர்” என்று கூறியுள்ளார். இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய வாகன ஓட்டிகளோ, பிரித்தானியா தாங்கள் செய்த வினைக்கு அதன் பலனை அனுபவிக்க வேண்டும். மேலும் குறுகிய கால விசாவிற்காக எல்லாம் நாங்கள் பிரித்தானியா செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்து என்ன திட்டம் தீட்டப்போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.