தமிழகத்தில் அனைத்து அரசுகட்டிடங்களையும் சிறப்பான முறையில் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவியெற்ற நாளில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிராகலாத் வருகை புரிந்துள்ளார்.
அதன் பின்னர் அவர் சென்னையில் தமிழக ஊராட்சி கழக தலைவர் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சந்தித்து இருவரும் தூய்மை பாரத இயக்கம் பற்றி கலந்துரையாடினர். அதன் பிறகு பேசிய இணையமைச்சர், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1,20,00,000 வீடுகளில் 40.33 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகள் அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்கள் போன்ற அரசு கட்டிடங்களுக்கு 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.366.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கு 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சுகாதாரம் கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி கழிவுகள் ஒழித்தல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி மற்றும் சமூக சுகாதாரம் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.