கொரோனா பரவலுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலமானது குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தற்பொழுது தான் படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில நாடுகள் கொரோனா தொற்றின் நான்காவது அலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். இருப்பினும் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவலானது குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியா நாடுகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் 29 நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பிறப்பு இறப்பு விகிதம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில் “கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து குழந்தைகளின் பிறப்பு சதவீதமானது மிகவும் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டை விட 2020ல் பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ், இத்தாலி, பெல்ஜியம், போன்ற ஐரோப்பியா நாடுகளிலும் சராசரி ஆயுட்காலம் ஆனது மிகவும் குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அதிலும் நடுத்தர வயது கொண்டவர்கள் அதிகமாக 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவிலும் 60 வயதான முதியவர்கள் பலர் இறந்துள்ளனர். குறிப்பாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது’. இதே போன்ற நிலையானது இரண்டாம் உலகப்போருக்கு பின்னாலும் ஏற்பட்டுள்ளது” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.