Categories
அரசியல்

கள்ள ஒட்டு போடுறதுல…. இவங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது…. அத சொல்றது நம்ம இபிஎஸ்…!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியதாவது, ” திமுக அரசு, பயிர்கடன், நகைகடன் தள்ளுப்படி செய்யவில்லை, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கவில்லை.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு யாரையெல்லாம் நாடினோமோ அவர்களை தான் திமுக அரசு நாடி தொழில் தொடங்க வலியுறுத்துகின்றனர். திமுக அரசு வெறும் 130 நாட்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி பெருமைப்படுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக  மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள் பலருடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலானது அதிமுக ஆட்சியில் மிகவும் நேர்மையாக நடைபெற்றுள்ளது. மேலும் அதிமுக எந்தவித தேர்தலையும் ஜனநாயக முறைப்படிதான் சந்திக்கின்றது. ஆனால் திமுகவினரோ தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்கள்” என திமுகவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |