மீனம் ராசி அன்பர்களே.! தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
இன்று எவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை நல்லபடியாக இருக்கும். பண விஷயத்தில் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் லாபம் இருக்கும். வெகு நாட்களாக காணாமல் போன பொருள் நீண்ட முயற்சியால் கையில் வந்து சேரும். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாமதம் ஏற்படுத்திய காரியங்கள் கூட இப்பொழுது வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் இருக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம் படுவீர்கள். கையில் காசு பணம் புரளும். மாணவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட வெற்றி கிடைக்கும். பெற்றோர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். பாடங்களை நன்கு படிக்க வேண்டும். காதல் பிரச்சினையை கொடுத்தாலும் சரியாகும். கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். காதலில் சில மாற்றங்கள் ஏற்படும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை