Categories
அரசியல்

ரொம்ப மோசம்…. இடுகாட்டை கூட விட்டு வைக்கவில்லை…. கமல்ஹாசன் வேதனை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பேசியதாவது, “மக்கள் நீதி மையத்தின் மக்கள் கொள்கைகளில் ஒன்று, வலுவான உள்ளாட்சிகளை முழுமையான மாநில சுயாட்சி ஆக மாற்றுவது ஆகும். மக்கள் நீதி மையமானது இதை கருத்தில் கொண்டே கருத்தியல் ரீதியிலும், களத்திலும் உள்ளாட்சிகளின் நலனை சீர்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் நாங்கள் மக்களின் தேவைகளை அடிப்படையிலிருந்து நிறைவேற்ற விரும்புகிறோம்.

எனவே மீண்டும், மீண்டும் கழக  கட்சிகளுக்கு வாக்களிக்காமல், நேர்மையான கட்சிகளுக்கு வாக்களியுங்கள். எஜமானர்கள் தான், கழகங்களுக்கு வாக்களித்தால் கிடைப்பார்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மன்றத்திற்கு வாக்களித்தால் உண்மையான சேவகர்கள் கிடைப்பார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியானது கிராமங்களின் வளர்ச்சியில் தான் உள்ளது. ஆனால் அந்த இடமானது, தற்பொழுது குப்பைகளை கொட்டி வைக்கும் இடமாகவும், மனிதர்களை புதைக்கும் இடமாகவும் மாறி உள்ளது. மக்கள் நம்பிக்கையை உடைப்பதாக இந்த செயல் உள்ளது. தற்பொழுது ஆட்சியாளர்கள் இந்த இடுகாட்டை கூட சும்மா விடவில்லை என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |