மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயது நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்களது 70 முதல் 75 வயதில் நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் இந்த செய்தியை பொய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க பத்திரிகையில் இந்த போலி செய்தி வெளியாகி பிற மொழிகளிலும் பரவி வருவதாகவும் இந்த செய்தியில் உண்மையில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Categories