திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர சென்று உள்ளார். அப்பொழுது அவருடன் இழைய குழந்தையையும் கூட்டி சென்று உள்ளார்.
குழந்தையை கவனிக்காமல் விட்டதால் அவர் எதிர்பாராத விதமாக சாலையை சற்று கடக்க, அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் ஓட்டுனரின் கவன குறைவால் குழந்தை மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.